இந்தியாவில் அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்ற கோ ஏர் (GoAir) விமானத்திற்குள் ஒரு புறா பறந்து வருவதைக் கண்டு பயணிகள் பெரும் ஆச்சரியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தை விமானத்தில் பயணித்த பயணிகள் காணொளி எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

குறித்த காணொளியில் விமானத்தில் புறா ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு பறந்து திரிந்துள்ளது. சிலர் பறவையைப் பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர் ஆனாலும் பிடிக்க முடியவில்லை. சில பயணிகள் உற்சாகமான தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து இந்த காட்சியைக் கண்டனர். அதே நேரத்தில் சிலர் புறாவை  வெளியே பறக்க விட விமானத்தின் பின்புறத்தை திறக்கும்படி பரிந்துரைத்துள்ளனர்.

மேற்படி குழப்பம் காரணமாக விமானம் முப்பது நிமிடங்கள் தாமதமானது என பயணியொருவர் 30 விநாடி காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில்  பகிரப்பட்ட குறித்த காணொளியை ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

டுவிட்டரில் நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை வெளியிட்டமையால் இது தற்போது வைரலாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.