பிள்ளையானை சிறையில் அடைத்தது அரசியல் பழிவாங்கல் - பத்தரமுல்லை சீலரத்தின தேரர்

Published By: Digital Desk 3

29 Feb, 2020 | 02:50 PM
image

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து செய்தது என்னவென்றால் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறையில்  அடைத்து  ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கலை செய்துள்ளது என ஜனசென பெரமுனை கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு ஜனசென பெரமுனை கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரா நேற்று வெள்ளிக்கிழமை (28.02.2020) மாலை சென்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை  சந்தித்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவத்தார்.

இந்த நாட்டில்  இன ஒற்றுமை  என்பது தமிழர்கள் சிங்களவர்கள் என எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த தாய் நாட்டினை விடுவித்த சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி செய்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு சம்பம் நிகழ்ந்தது மிகவும் மனவருத்தத்துக்குரிய ஒரு விடயமாகும்.

தற்போதைய அரசு பிள்ளையானுக்கு பிணை கொடுத்து அவருடைய செயற்பாட்டை  செய்வதற்கு  இடமளிக்கப்படும் என நாங்கள்  அமைதியாக இருக்கின்றோம். 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது கௌரவ நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்கின்றேன். வழக்கு தொடர்ந்து செல்வதால் இது தொடர்பாக நான் எந்த வசனமும் தெரிவிக்க விரும்பவில்லை. 

நான் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இந்த வழக்கை விரைவில் ஆராய்ந்து தீர்ப்பை வழங்கி நிரபராதி என்றால் நிரபராதி எனவும் குற்றவானி என்றால் குற்றவாளி எனவும் அவர்களுக்கு பிணை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அனைத்து இனங்களும் ஒன்று சேர்ந்து நாட்டினை கட்டியொழுப்ப வேண்டும் இல்லையெனில் இந்த நாட்டினை எவராலும் கட்டியெழுப்ப முடியாது ஒவ்வொருவருக்கும் இடையே வைராக்கியம் வேண்டாம் அப்படி வைராக்கியம் செய்பவர்களுக்கு பௌத்த மதகுரு என்ற வகையில் கருணை, அன்பு, செலுத்தி ஆசீர்வசிப்போம் என அவர் தெரிவித்தார்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் யாசகம் பெறும் பெண் ஒருவர்...

2026-01-25 14:32:05
news-image

எல்லை நிர்ணய குழு மீள் நியமனம்...

2026-01-25 14:30:40
news-image

அரசாங்கம் ஆட்சியைத் தக்கவைக்க கலாசாரம் மற்றும்...

2026-01-25 14:20:31
news-image

அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25 13:05:29
news-image

மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி...

2026-01-25 13:50:34
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-01-25 13:08:42
news-image

சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க மூத்த...

2026-01-25 12:26:18
news-image

குளிரிலும் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப்...

2026-01-25 12:32:31
news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42
news-image

பெரகல வனப்பகுதியில் பெண் கொலை :...

2026-01-25 11:58:42
news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 12:04:52