வடமேற்கு, மேற்கு, தெற்கு , சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் மன்னார் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை பதிவாகும். அதேவேளை, குறித்த பகுதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன்னார், புத்தளம், குருணாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்னபுரி, காலி, மத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான காலநிலையில் நிலவுவதால் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்ககு அடுத்த சில நாட்களில், குறிப்பாக காலை வேளையில் அதிக வெப்பம் காரணமாக, வெப்ப பக்கவாதம் (Heat strokes) ஏற்படக்கூடும். உடலால் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமற்போனால், அது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யக்கூடும். இதனால், வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் இந்நோய் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
மேலும், தசைப்பிடிப்புடன் மயக்கம், சோர்வு நிலை ஏற்பட வாய்ப்புள்ளமையால் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
இதன் காரணமாக, வெளியிடங்களில் வேலை செய்வோர் அடிக்கடி நீர் அருந்தி நிழலில் ஓய்வெடுப்பது அவசியம்.
விசேட அவதானமிக்க தரப்பைச் சேர்ந்த நபர்கள், தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால், மிகவும் பாதுகாப்புப் பெறவேண்டும். சிறுவர்கள், 4 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த வெப்பநிலை மாற்றத்தை அதிகளவில் உணர்திறன் கொண்டிருக்கிறார்கள். இதனால், தங்களது உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க, மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள்.
இதேவேளை, உடல் பருமன் அதிகமானோரால், தங்களுடைய தோலுக்குக் கீழுள்ள எண்ணெய்ப் படிவத்தால், உடல் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள முடியாது. அதனால், இலகுவான ஆடைகளை அணிந்து, குளிர்மையான இடங்களில் இருப்பதும், சிறுவர்களுக்கும் இலகுவான ஆடைகளை அணிவித்து, அவர்களையும் குளிர்மையான இடத்தில் வைப்பதும் சிறந்தது. அத்துடன், சிறுவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்கள், நீர் என்பவற்றைப் பருக்கச் செய்வதோடு, சூடான உணவுகள், பானங்களை அவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM