கொரோனா வைரஸ் தாக்கம் உருவான சீனாவின் நிலை, தற்போது குறிப்பிடிதக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளப்போதும், இது வரை நாற்பத்தொன்பது நாடுகளை தாக்கியுள்ள இவ் வைரஸ் காணமாக உலகளவில் சுகாதார அவசரகாலநிலை நீடித்துள்ளது.

மேலும் நிலமையை கட்டுபடுத்த முடியாது போனால் அனைத்து நாடுகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் உயர்மட்ட எச்சைரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில்,  நோய் தாக்கம்  அதிகமான சீனாவின் பிரதான நிலப்பில் 427 புதிய உறுதி செய்யப்பட்ட நோயாளர்களும், இதேவேளை 47 புதிய இறப்புகளும் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளின் படி சீனாவில் வைரஸ் தாக்கம் காரணமாக  இறந்தவர்களின் எண்ணிக்கை 2,835 ஆகவும், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 79,251 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிற்கு வெளியே அதிகமான இறப்புகள் இத்தாலியில் பதிவாகியுள்ளது. இத்தாலியில் 820  கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதிசெய்ப்பட்டுள்ளதுடன் இது வரை 21 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவிற்கு வெளியே  மிக அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட  நோயளர்களை கொண்ட தென் கொரியாவில், சனிக்கிழமை காலை வரை 594 புதிய நோயாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து  கொரோனா வைரஸ்  நோயாளர்களின் எண்ணிக்கையை 2,931 ஆகக் உயர்ந்துள்ளது. அத்துடன் தென் கொரியாவில் மூன்று புதிய இறப்புகளுடன் இது வரை 16 இறப்புகள் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தப்போது கொவிட் 19 நோய் காரணமாக  83,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,  இறப்பு எண்ணிக்கை இப்போது 2,800 க்கும் அதிகமாகயுள்ளது. இதேவேளை, 36000 அதிகமானோர் நோய்பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகளவில்....

மார்ச் 14 அன்று திட்டமிடப்பட்ட ஆசிய உச்சி மாநாட்டை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. 

அவுஸ்திரேலியாவில் இரண்டு புதிய கொரோனா வைரஸ் நோயளர்கள் பதிவானதையடுத்து மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதுடன் டயமன்ட் பயணக் கப்பலில் பயணித்த 70 வயதான இங்கிலாந்து  பயணி ஒருவர் வைரஸால் காரணமாக இறந்துள்ளார். 

நைஜீரியாவில்  முதலாவது நோயாளர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். 

 பலவீனமான பொது சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நோய் பரவும் அபாயம்  அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.