வெள்ளவத்தை பகுதியில் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரிடமிருந்து 215 கிராம் 9 மில்லிகிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

களுத்துறை குற்றப்பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் வெள்ளவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரைவரையும் இன்று (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.