இத்தாலியிலிருந்து வந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி..!

Published By: J.G.Stephan

29 Feb, 2020 | 02:41 PM
image

 இத்தாலியிலிருந்து வந்த இலங்கையர் இருவர், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதான சந்தேகத்துடன் அங்கொட தொற்றுநோய் பிரிவு IDH வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைக்கு அமைய சம்பந்தப்பட்ட 2 நபர்களுக்கும் வைரஸ் தாக்கம் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியன நோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டு அந்த இருவரும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. 

இந்நிலையில்,  IDH வைத்தியசாலைக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்கள்  மீண்டும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம மேலும் தெரிவித்தார். 

அத்தோடு இது தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32