இராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 3, 1/2 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றபட்ட போதைப்பொருளின் பெறுமதி மூன்றரை கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமியானது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.