இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது நூற்றுக்கு 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலாண்டில் குறிப்பிடத்தக்களவு பொருளாதார வளர்ச்சி கைத்தொழில் மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய துறையிலும் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் காய்கறி பயிர்ச்செய்கை, தேங்காய் பயிர்ச்செய்கை, எண்ணெய் பழங்கள் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை உற்பத்திகள் என்பவற்றின் பொருளாதார வளர்ச்சியானது வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தேயிலை பயிர்ச்செய்கை, இறப்பர் பயிர்செய்கை மற்றும் கடற் மீன் துறையென்பனவற்றின் பொருளாதார வளர்ச்சயின் வேகமானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.