(ஆர்.விதுஷா)

மத அடிப்படை வாத்தை  தூண்டி நாட்டு மக்களின்  ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிராகவே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய  மக்கள் சக்தி  பொதுக்கூட்டணியில்  இணைந்து  கொண்டுள்ளதாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  தலைவர்  ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார். 

அத்துடன் இந்த கூட்டணியில்  எதிர்வரும் பொதுத்தேர்தலை வெற்றிகொள்வதற்கு  ஏதுவான  கொள்கைத்   திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.