ஊவா, வெல்லஸ்ஸ பிரதேசத்தில் 200 குளங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீர்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். 

அதன் பிரகாரம், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நவோதய திட்டத்தின் கீழ் இந்தக் குளங்கள் அமைக்கும் பணியானது நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மொனராகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.