கொழும்பு, பம்பலப்பிட்டி - டுப்ளிகேசன் பகுதியில் கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடமொன்றின் களஞ்சியசாலையிலேயே குறித்த தீ பரவியுள்ளது.

இவ்வாறு பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.