‘கைதி’ ரீமேக்கில் நடிக்கும் அஜய் தேவ்கன் 

Published By: Daya

28 Feb, 2020 | 03:18 PM
image

கார்த்திக் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிபெற்ற ‘கைதி’ திரைப்படம் ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘கைதி’. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. 

அந்தவகையில் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்க முன்னணி பொலிவூட் நடிகர் அஜய் தேவகன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தப் படம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொலிவூட் நடிகர் அஜய் தேவகன், தற்போது பாகுபலி புகழ் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் ‘ஆர் .ஆர். ஆர்.’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும், சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்