ஐ.நா மனித உரிமைகள் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்ட 30/1  தீர்­மானம் 2021ஆம் ஆண்டு வரை இருக்­கத்தான் போகி­றது. இலங்கை மீதான சர்­வ­தேச நாடு­களின் அழுத்தம் தொடர்ச்­சி­யாக இருக்கும் என்று பிரித்­தா­னிய தமிழர் பேர­வையின் மனித உரிமைகளுக்­கான இணைப்­பாளர் சண்­சுதா தெரி­வித்தார்.

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43ஆவது கூட்­டத்­தொ­டரில் பங்­கேற்­றுள்ள  அவர், கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில்  இதனை குறிப்­பிட்டார். செவ்வி வரு­மாறு:

கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் பேர­வையின் இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை விலகிக் கொள்­வ­தாக வெளி­வி­வ­கார அமைச்சர்  தினேஸ் குண­வர்­தன அறி­வித்­தி­ருக்­கிறார். இதனை உங்கள் அமைப்பு எவ்­வாறு நோக்­கு­கி­றது?

பதில்: புதிய ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக் ஷ ஆட்­சிக்கு வந்­த­வுடன் இது இடம்­பெறும் என்று நாம் எதிர்­பார்த்­த­ப­டியே இவர்கள் வெளி­யே­றி­யுள்­ளார்கள். ஆனால், ஐ.நா.வில் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்த தீர்­மானம் 2021ஆம் ஆண்டு வரை இருக்­கத்தான் போகி­றது. இலங்கை மீதான சர்­வ­தேச நாடு­களின் அழுத்தம் தொடர்ச்­சி­யாக இருக்கும். இவர்கள் இதி­லி­ருந்து வெளி­யே­றி­னாலும் கூட  கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்­கான வலிமை இருக்­கவே செய்யும்.

கேள்வி: அமைச்சர் தினேஸ் குண­வர்­தன தெரி­வித்­தப்­படி உள்­ளக விசா­ர­ணைக்கு இலங்கை தயா­ரென்றால் அதனை  புலம்பெயர்  அமைப்­புகள்  ஏற்றுக் கொள்­ளுமா?

பதில்:  நிச்­ச­ய­மாக எதிர்­கொள்ளும்.

அதா­வது இலங்­கையில் ந­டை­பெற்­றது இனப்­ப­டு­கொலை.  கோத்­தபாய ராஜ­பக் ஷ பத­விக்கு வந்­த­வு­ட­னேயே சிறை­யி­லி­ருந்த முன்னாள் இரா­ணுவ வீரர்­களை விடு­வித்­துள்ளார். அது­மட்­டு­மல்­லாது, நீதித்­து­றையில் இவர்­க­ளது தலை­யீடு அதி­க­மாக இருக்கும். உள்­ளக விசா­ர­ணைக்கு தயார் என  அமைச்சர் தினேஸ் குண­வர்தன  குறிப்­பி­ட்­டி­ருந்­தாலும் நாட்டின் பிர­தான இரு கட்­சி­களும் இந்த பிரச்­சி­னைக்­கான ஒரு­ தீர்வை பெற்றுக் கொடுக்­கப்­போ­வ­தில்லை. இத­னா­லேயே  சர்­வ­தே­சத்­துக்கு கொண்டு செல்ல வேண்­டு­மென நாம் வலி­யு­றுத்தி வந்தோம்.

அண்­மையில் கூட மங்­கள  சம­ர­வீர ஒரு விட­யத்தை தெரி­வித்­தி­ருந்தார். மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையும் இரா­ணுவ வீரர்­க­ளையும் காப்­பாற்­று­வ­தற்­கா­கவே  இந்த தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­த­தாக தெரி­வித்­தி­ருந்தார். ஆகவே இதி­லி­ருந்து அவர்­க­ளது முகத்­திரை நன்­றா­கவே தெரி­கி­றது. இத­னா­லேயே நாங்கள் சர்­வ­தேச நீதி­மன்­றுக்கு கொண்டு செல்ல வேண்டும். விசேட தீர்ப்­பா­யத்தின் ஊடாக விசா­ரிக்க வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக அழுத்தம் பிர­யோ­கித்து வரு­கின்றோம். இல்­லையேல்  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஒரு­போதும் இலங்கை அர­சாங்கம் தீர்வை பெற்றுக் கொடுக்­காது.

கேள்வி: மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரங்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க இருக்­கின்­ற­தா­லேயே நீங்கள் சர்­வ­தேச மட்­டத்­துக்கு கொண்டு செல்ல வேண்­டு­மென கூறி­வ­ரு­கின்­றீர்­கள்.  ஆனால், ஒரு­தரப்பு சர்­வ­தேச மட்­டத்­துக்கு கொண்டு செல்ல முடி­யாது என்­கி­றது மற்­றொரு தரப்பு கொண்டு செல்ல முடி­யு­மென்­கி­றது. இது குறித்து உங்கள் அமைப்பின் கருத்து என்ன?

பதில்:    கொண்டு செல்ல முடியும். இலங்­கையில் நடை­பெற்­றது ஒரு மனித படு­கொலை. ஆவே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு  தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட  விசா­ரணை வேண்­டு­மென சர்­வ­தேச நாடு­க­ளுடன் பல்­வேறு சந்­திப்­பு­களை மேற்­கொண்டோம்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை  அர­சுக்கு சார்­பாக  தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. பிரித்­தா­னியா  உள்­ளிட்ட பல நாடு­களின் அழுத்தம் கார­ண­மாக இலங்கை சார்­பான தீர்­மானம் 2011ஆம் ஆண்டு  கன­டாவை முன்­னி­றுத்­து­வ­தாக தெரி­வித்­தது. பின்னர் அமெ­ரிக்கா  கையி­லெ­டுத்து அத­னூ­டாக கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதன் பின்­னர்தான் முத­லா­வது தீர்­மானம் இங்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

தற்­போது இலங்­கையில் சீனா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மான போட்டி  நில­வு­கிறது. ஆகவே இலங்­கையில் நடந்­தே­றிய இனப்­ப­டு­கொ­லை­க­ளுக்கு தீர்வு வேண்டி நிச்­ச­ய­மாக சர்­வ­தே­சத்தின் ஊடாக ஒரு பொறி­மு­றையை நிறு­வலாம். அது புலம்­பெ­யர்ந்து வாழும் மக்­களின் கைக­ளி­லேயே உள்­ளது.

கேள்வி:   புலம் பெயர் அமைப்­பு­க­ளிடம் ஒற்­று­மை­யின்மை காணப்­ப­டு­வ­தாக பர­வ­லான கருத்து  நில­வி­வ­ரு­கின்றது. எனவே இங்கு அனைத்து புலம்பெயர் அமைப்­புகளும் ஒன்­றி­ணைந்து செயற்­பட முடி­யாதா?

பதில்: நிச்­ச­ய­மாக ஒன்­றித்து பயணிக்க முடியும். 2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர் பிரித்தானியா தமிழர் பேரவையான நாம்  வேலைத்திட்டங்களை ஆரம்பித்தோம். எங்களை தொடர்ந்து பல அமைப்புகள் கைகோர்த்தன. அதன்பின்பு  உருவான பல அமைப்புகள் போதிய தொடர்பு இன்மையால் ஒருவருக் கொருவர் குறைக் கூறி வருகின்றன. இங்கு எமது மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமாயின் அனைத்து அமைப்புகளும் வேலைத்திட்டங்கள் ஊடாக ஒன்றித்து பயணிக்க வேண்டும்.