சுமார் 100 க்கும் அதிகமான பயணிகளுடன் பயணித்த போயிங் - 777 விமானம் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலிருந்து பாங்கொக்கிற்கு பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் உள்ள விமானி இருக்கைக்கு முன்னாலுள்ள யன்னலில் வெடிப்பு ஏற்பட்டதாலேயே விமானி அவசரமாக தரையிறக்குவதற்கு விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

Image Help : Sputnik News