பாகிஸ்­தா­னிய லாகூர் நக­ரி­லுள்ள மிரு­கக்­காட்­சி­ச்சா­லையில் சிங்­கங்­க­ளுக்­கான புக­லி­டத்தில் 17 வயது சிறுவன் ஒரு­வ­னது சடல எச்­சங்கள் நேற்று முன்­தினம்   புதன்­கி­ழமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

முஹமட் பிலால் என்ற மேற்­படி சிறுவன் முதல் நாள்  குறிப்­பிட்ட சிங்­கங்­க­ளுக்­கான புக­லிடம் அமைந்­தி­ருந்த பிராந்­தி­யத்­துக்கு விஜயம் செய்த போது காணாமல் போயி­ருந்தான்.

இரவு நேரத்தில் அந்த சிறு­வனை அந்தப் புக­லி­டத்தில் தேடு­வது அபா­ய­க­ர­மா­னது என்­பதால் மறுநாள் புதன்­கி­ழ­மையே அவனைத் தேடும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதன்­போது  அந்த மிரு­கக்­காட்­சிச்­சாலைப் பணி­யா­ளர்­களால் அந்தப் புக­லி­டத்தில் இரத்தம் தோய்ந்த மண்­டை­யோடு ஒன்றும் சில எலும்­பு­களும்  கிழிந்த நிலையில் ஆடைத் துண்­டு­களும்  கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

கண்­டெ­டுக்­கப்­பட்ட ஆடைத் துண்­டுகள் குறிப்­பிட்ட அந்த சிறுவன் அணிந்­தி­ருந்த ஆடை­க­ளுக்­கு­ரி­யன என்­பதை அவ­னது உற­வி­னர்கள் அடை­யாளம் காட்­டி­ய­தாக அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.
குறிப்­பிட்ட சிறுவன் செவ்­வாய்க்­கி­ழமை மாலை கால் நடை­க­ளுக்கு உண­வ­ளிக்க புல்லை வெட்டச் சென்ற நிலை­யி­லேயே இந்த அசம்­பா­விதம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் அந்த சிறுவன் எவ்­வாறு பாது­காப்பு வேலியைத் தாண்டி சிங்­கங்­க­ளுக்­கான புகலிடத்திற்குள்  பிரவேசித்தான் என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.