பூமி­யி­லி­ருந்து 124  ஒளியாண்­டுகள் தொலை­வி­லுள்ள  கோளொன்றில்  நீரும் உயிர்­வாழ்க்கை இருப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூறும் உள்­ள­மைக்­கான சான்­றுகள் காணப்­ப­டு­வ­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

கே2 18பி என்ற கோளி­லேயே   இவ்­வாறு உயிர்­வாழ்க்கை இருப்­ப­தற்­கான சாத்­தியக் கூறு அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­­ளர்கள் கூறு­கின்­றனர். பாறை­யு­ரு­வான அந்தக் கோளின் வளி­மண்­ட­லத்தில்  ஐத­ரசன் செறி­ந்த நீராவி காணப்­ப­டு­வ­துடன் மெதேன் மற்றும் அமோ­னியா உள்­ள­டங்­க­லான  இர­சா­ய­னங்கள் எதிர்பார்க்கப்பட்டதிலும்  குறைவாகவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.