உள்ளநாட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் உத்தரவாத விலையினை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன்படி உள்ளநாட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் ஒருகிலோ வெங்காயத்தின் உத்தரவாத விலையினை  60 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்த இதனை தெரிவித்தார்.