பாராளுமன்ற அனுமதி இல்லாமல் அமெரிக்காவின் மிலேனியம் செலேன்ச் கோப்பரேசன் (எம்.சி.சி.) ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

.

நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமெரிக்காவின் மில்லினியம் சேலஞ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பாக தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, இந்த ஒப்பந்தம் அரசியலமைப்பின் படி இல்லை என்றும் அதேவேளை, பாராளுமன்றத்தின் அனுமதியின்றி குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதில்லையெனவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்ய அமெரிக்காவுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.