நைஜீரியா நாட்டில் தனது முதலாவது கொரோனா பாதிப்பினை உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தனது டுவிட்ர் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆபிரிக்க கண்டத்தின் நைஜீரிய நாட்டின் தென்மேற்கு வணிக நகரான லாகோஸ் மாநிலத்தில் குறித்த கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

20 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் அதிகளவிலான மக்கள் தொகை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் மிக வேகமாக பரவி வரும்  கொரோனா வைரஸ் நோய் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், நைஜீரியாவில் பதிவு செய்த முதல் வழக்கு இதுவென அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 78,824 ஆக அதிகரித்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் 83,045 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை மொத்தமாக 36,117 நோயளார்கள் வைத்தியசாலைகளிலிருந்து பூரண குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image Help : DW News