( மயூரன் )

தடைசெய்யப்பட்ட  தங்கூசி வலைகளை பயன்படுத்தி பிடிக்கபட்ட மீன்கள்  ஊர்காவற்துறை  நீதிவான்  நீதிமன்றில் 64 ஆயிரத்து 500 ரூபாவுக்கு  ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள் மூன்று  படகுகளில் வேலணை  கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை  பயன்படுத்தி மீன் பிடியில்  ஈடுபட்டு இருந்தனர்.
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில்  ஈடுபட்டதனால் அவர்களை கைது  செய்த கடற்படையினர். அவர்களிடம்  இருந்து மூன்று தொகுதி  தங்கூசி வலைகளையும் , 384 கிலோ மீன்களையும்  கைப்பற்றினர்.
கைது  செய்த  மீனவர்களையும் கைபற்றப்பட்ட  வலைகள் மற்றும் மீன்களை கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்து  இருந்தனர். 
அதனை  தொடர்ந்து கடற்தொழில் நீரியல் வளத்துறையினரால் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை  முற்படுத்தியதுடன்  அவர்களிடம்  இருந்து கைப்பற்றப் பட்ட வலைகள் மற்றும்  மீன்கள் என்பனவற்றையும் நீதிமன்றில் பாரப்படுத்தினர்.
அதனை  தொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதவான் , பதினோரு மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் , அவர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட  வலைகளை அழிக்குமாறும் , மீன்கள்  நல்ல  நிலையில்  இருகின்றமையால் அவற்றை ஏலத்தில் விற்பனை  செய்யுமாறும் உத்தரவு இட்டார்.
அதனை  தொடர்ந்து 384 கிலோ மீனும் 64 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.