பயிர்களை உண்ணும் வெட்டுக்கிளிகளை சமாளிக்க 100,000 வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு சீனா தயாராகி வருகின்றது.

ஒரு வாத்தானது ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகளை சாப்பிடலாம் எனத் தெரிவித்த சீன விவசாய வல்லுநர்கள், வாத்துகளை வைத்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் செயல்முறையானது பூச்சிக்கொல்லிகளை விடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவளை பயிர்செய்கையில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தை குறைப்பதற்கான திட்டங்களை உருவாக்க நிபுணர்கள் குழுவை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்புவள்ளதாகவும் இந்த வாரம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பயிர்செய்கையானது கடந்த இரண்டு தசாப்தங்களாக வெட்டுக்கிளிகளின் தாக்கம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.