கைதுசெய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான  சஹ்ரானின் சகோதரி, மைத்துனன் ஆகிய இருவரையும் எதிர்வரும் மார்ச் 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்றைய தினம் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த குண்டு தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். 

இந்த சம்பவத்தையடுத்து சஹ்ரானின் சொந்த இடமான காத்தான்குடி பிரதேசத்தைதில் வைத்து அவரின் சகோதரியான மொஹமட் காசிம் மொஹமட் மதனியா அவரது கணவராக முகமது நியாஸ்   ஆகியோரை கடந்த 2019 ஆண்டு  மே மாதம் முதலாம் திகதி காத்தான்குடியில் பொலிஸார் கைதுசெய்ததுடன், 20 இலட்சம் ரூபா பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு சி.ஐ.டி.யினர் விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் இவ்  இருவரையும் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை மார்ச் மாதம் 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.