அரசாங்கத்திற்கு இருவார காலம் : தீர்வில்லையேல் மார்ச் 16 முதல்தொடர் வேலை நிறுத்தம் 

Published By: R. Kalaichelvan

27 Feb, 2020 | 08:01 PM
image

(ஆர்.விதுஷா)

இரண்டு வார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி தீவைப்பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம்  திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர் , ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுதத்த போரட்டத்தில் ஈடுப்படுவதாக தொழிற்சங்கங்கள்  எச்சரித்துள்ளன.

எதிர்க்கட்சி  தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த தேசிய கல்வி  சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய , மேலும் கூறுகையில்,   

ஆசிரியர் - அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை  முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பணவை வழங்குமாறு கோரிக்கையொன்றினை அரசாங்கத்திடம்    முன்வைத்திருந்தோம். அதனை வழங்குவதாக கூறி கடந்த அரசாங்கம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி மீண்டுமொரு  அமைச்சரவை தீர்மானத்தை வெளியிட்டிருந்தது.

இருப்பினும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு  வந்ததை அடுத்து  அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இந்த அரசாங்கம் அதற்கான தீர்வினைப்பெற்றுத்தருவதாக  கூறியிருந்த போதிலும் எந்த தீர்மானத்தையும் பெற்றுத்தரவில்லை.   

ஆகவே இடைக்கால கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்டஏழு அம்ச கோரிக்கைளை கல்வி அமைச்சில் கையளித்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கான அனுமதியினை  கேட்டிருந்தோம். 

இருப்பினும் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற ஆர்பாட்டத்தின்  போது எமக்கு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. ஆகவே , இரண்டு வார காலத்திற்குள்   அரசாங்கம் தகுந்த தீர்மானத்தை பெற்றுத்தர தவறும் பட்சத்தில்   மார்ச் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து தொடர் அடையாள  வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளோம் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47