ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடுமாறு இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பானின் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாகாத பயணிகள் வெளியேறியுள்ளனர்.

இவர்களின் வெளியேற்றம், அந்த கப்பலில் பயணித்த பயணிகளின் வைத்திய சோதனைகள் தொடர்பில் விமார்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் மாதம் இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 700 க்கும் மேற்பட்டோர் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் அடையாளம் காணப்பட்டனர்.

அது மாத்திரமல்லாது ஜப்பானில் இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN