திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளாரின் 'காலத்தின் தடங்கள்','மறைபொருள் நாடகங்கள்' ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு நாளை மறுதினம் (01.03.2020)  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இல.286,பிரதான வீதி,யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.

'காலத்தின் தடங்கள்'-கலைமுகம் கலை,இலக்கிய,சமூக இதழில் வெளிவந்த ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பாகவும்,'மறைபொருள் நாடகங்கள்'-திருவிவிலியத்தினை அடிப்படையாகக் கொண்டு 1960 களில் அடிகளார் எழுதப்பட்ட பத்து நாடகங்களைக் கொண்ட தொகுப்பாகவும் வெளிவருகின்றது.

திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வில் வெளியீட்டுரையை திருமறைக் கலாமன்றத்தின்  ஊடக இணைப்பாளரும்,'கலைமுகம்' சஞ்சிகையின் பொறுப்பாசிரியருமான கி.செல்மர் எமிலும்,மதிப்புரைகளை 'காலத்தின் தடங்கள்' நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் ச.ராதேயனும்,'மறைபொருள் நாடகங்கள்' நூலுக்கு அருள்திரு.செ.அன்புராசா அடிகளாரும் வழங்குவார்கள்.