பிரேஸிலில் இருந்து சீனி இறக்­கு­மதி செய்யும் நட­வ­டிக்­கை­க­ளி­டையே 200 கோடி ரூபா பெறு­ம­தி­யான 80 கிலோ கொக்கைன் போதைப்பொரு­ளினை நாட்­டுக்குள் கடத்­திய சம்பவம் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆரம்­பித்­துள்­ளது.

அதன்­படி இந்த கொக்கைன் போதைப் பொருள் கடத்­தலின் பின்­ன­ணியில் உள்­ள­தாக கரு­தப்­படும் பிர­தான சந்­தேக நப­ரான பிரேசில் பிரஜை தற்­ச­மயம் இலங்­கைக்குள் இருப்­ப­தாக சந்­தே­கிக்கும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அவர் தப்பி செல்லக் கூடிய வாய்ப்­புக்கள் உள்­ளதால் அதனை தடுக்க தீவிர நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது.

இது தொடர்பில் கட்­டு­நா­யக்க விமான நிலைய அதி­கா­ரிகள் ஊடாக தக­வல்­களைசேக­ரித்­துள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் சந்­தேக நபர் தப்பிச் செல்­வதை தடுக்கும் முக­மாக அனைத்து தக­வல்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

இந்த விவ­காரம் குறித்து இலங்­கையில் உள்ள பிரேசில் தூத­ர­கமும் போதைப் பொருள் தடுப்புப் பணி­யகம் ஊடாக தக­வல்­களை சேக­ரித்­துள்ள நிலையில் அந்த தூத­ர­கமும் பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளது.

இதனிடையே, கொழும்பில் உள்ள பிர­பல சீனி இறக்­கு­ம­தி­யாளர் ஒரு­வ­ருக்கு என தெரி­வித்து அனுப்­பட்­டி­ருந்த சீனி கொள்­கலனு­டன் கப்­பலில் வந்த ஏனைய கொள்­க­லன்கள் தொடர்­பிலும் பொலிஸார் விஷேட அவதானம் செலுத்தி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸ் ஊடக பணிப்­ப­ளர்கள் சபையின் அங்­கத்­த­வரும் கொழும்பு வடக்கு பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான அஜித் ரோஹண தெரி­வித்தார்.

கடந்த 5 ஆம் திகதி இந்த கப்பல் இலங்­கைக்கு வந்­துள்­ள­தாக குறிப்­பிட்ட அவர் 12 ஆம் திகதி பொலி­சா­ருக்கு தகவல் கிடைத்­த­தா­கவும் 14 ஆம் திகதி அது குறித்த சுற்­றி­வ­லைப்பு இடம்­பெற்­ற­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். நட­வ­டிக்கை வல­யத்தில் 5 கொள்­க­லன்­களே பரி­சோ­திக்­கப்பட்­ட­தா­கவும்இ இலங்­கைக்கு வந்த வந்த கப்­பலில் இருந்த ஏனை­ய கொள்­க­லன்­களில் என்ன இருந்­தன என்­பது குறித்து சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­த­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இந் நிலையில் கைது செய்­யப்பட்­டுள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளி­டமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக குறிப்­பிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண, இலங்­கைக்குள் கொக்கைன் கொண்­டு­வ­ரப்­பட்ட நோக்கம் குறித்து இதில் வெளிப்­ப­டுத்­தல்­களை முன்­னெ­டுக்க எதிர்ப்­பார்ப்­ப­தாக சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே இலங்­கைக்குள் கொண்­டு­வ­ரப்­பட்ட குறித்த கொக்கைன் போதைப் பொருள் தொகை­யா­னது மீள வெளிநாடொன்­றுக்கு அனுப்பும் நோக்கில் கொண்­டு­வ­ரப்பட்­ட­தாக இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் சந்­தே­கிக்­கத்­தக்க தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன. அதனை உறுதிப்­ப­டுத்த தொடர்ந்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்ப்ட்­டுள்­ள­துடன் எந்த நாட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­காக இலங்கை மத்­தி­ய­த­ள­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது குறித்தும் அவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக அறிய முடி­கி­றது.

இதனை விட தற்­போது கைதா­கி­யுள்ள சீனி வர்த்­தகர் கடந்த 20 வருட கால­மாக சீனி வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அதில் 15 வரு­டங்­க­ளாக சீனி இறக்­கு­மதி வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்கும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அந்த 15 வருட கலத்தில் இத்­த­கைய சட்ட விரோத செயல்கள் எதுவும் இடம்­பெற்­றுள்­ள­னவா எனவும் விசா­ரித்து வரு­கின்­றனர்.

இந் நிலையில் கொக்கைன் போதைப் பொருள் இருந்த கொள்கலனில் மேலதிகமாக இருந்த சீனி 26650 கிலோவும் அரச உடமையககப்ப்ட்டுள்ளது.