தெற்காசியாவில் தனது விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக, ஆசியாவின் மிகவும் நம்பகமான, நேரம் தவறாமல் இயங்கும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமான GoAir தனது புதிய நேரடி விமானங்களை கொழும்பிலிருந்து டெல்லி மற்றும் பெங்களூர் வரை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புக்கான GoAir இன் விமான சேவைகள் மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

கொழும்பு-டெல்லி-கொழும்பு விமானங்களுக்கு  ரூபா 35,512 மற்றும் கொழும்பு -பெங்களூர் - கொழும்பு விமானங்களுக்கு  ரூபா 24,900 முதல் கவர்ச்சிகரமான மீள் வருகைக் கட்டணங்களுடன் இந்த இரண்டு புதிய  விமான சேவை எல்லைகளையும் GoAir நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லி மற்றும் பெங்களூருக்கு பிரபலமான புனித யாத்திரைகளை மேற்கொள்ள நேரடி விமான சேவைகளை வழங்குகின்றது. ‘‘The Buddhist Circuit’’ என்ற இத்திட்டத்தில் போத்காயா, வைஷாலி, பீகாரில் ராஜ்கீர் மற்றும் சாரநாத், ஸ்ராவஸ்தி, உத்தரபிரதேசத்தின் குஷினகர் போன்ற இடங்கள் அடங்கும். அத்தோடு டெல்லி மற்றும் பெங்களூரிலிருந்து வாரணாசி (உத்தரபிரதேசம்) மற்றும் பாட்னா (பீகார்) ஆகிய பிரதேசங்களுக்கு GoAir நேரடி விமான சேவைகளைக் கொண்டுள்ளது.

புதிய விமான சேவை அறிவிப்பு குறித்து பேசிய GoAir இன் நிர்வாக இயக்குனர் திரு. ஜெ. வாடியா கருத்து தெரிவிக்கையில்,

“GoAir 144 A320 neo ரக விமானங்களை, 7-8 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ஒரு விமானத்தை பெற கொள்வனவு ஆணையை பிறப்பித்துள்ளது.

இலங்கைக்கான எங்கள் நுழைவு 2018 முதல் நாங்கள் கடைபிடித்து வந்த சர்வதேச சந்தைகளுக்கான மூலோபாயத்தின் ஒரு அடைவாகும். “GoAir 144 A320 neo விமானங்கள் உறுதியான பதிவுகளை வைத்துள்ளது, GoAir  ஆசியாவின் நேரம் தவறாமல் இயங்கும் 10 விமான நிறுவனங்களில் ஒன்றாக Cirium இனால் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அபெக்ஸ் கணக்கெடுப்பில் 1.4 மில்லியன் பயணிகளிடமிருந்து நான்கு நட்சத்திர மதிப்பீடுகளை நாங்கள் பெற்றுள்ளோம். ஒட்டுமொத்த விமான அனுபவம், கேபின் சேவை, இருக்கை வசதி, தூய்மை மற்றும் உணவு , பாணங்கள் என்பவற்றிற்கான மிகச் சிறந்த விமான சேவையாக GoAir ஐ பயணிகள் மதிப்பிட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இப்போது GoAir இல் பயணிக்கும்போது அதே தரத்திலான மிகச்சிறந்த சேவையை அனுபவிக்க முடியும். இலங்கையில் எங்களுக்கு கிடைத்த வலுவான ஆதரவுக்கு இலங்கை அரசு, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் மற்றும் எங்கள் ஜிஎஸ்ஏ கூட்டாளர் எயிட்கன் ஸ்பென்ஸீக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” எனக்குறிப்பிட்டார்.

எயிட்கன் ஸ்பென்ஸ் பி.எல்.சி.யின் இயக்குனரும் வணிக மேம்பாடு மற்றும் பிளாண்டேஷன் பிரிவு தலைவருமான டாக்டர் ரொஹான் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

“ எயிட்கன் ஸ்பென்ஸின் துணை நிறுவனமான ராயல் ஸ்பென்ஸ் இலங்கையை அதன் 10ஆவது சர்வதேச விமான எல்லையாக குறிக்கும் வகையில் புழயுசை இந்த விமான கூட்டுடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியடைகிறது.

எயிட்கன் ஸ்பென்ஸ் இலங்கை, மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷ் பிரதிநிதித்துவங்களுடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விமான சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

உங்களுக்குத் தெரிந்தபடி, 150 ஆண்டுகளுக்கு முன்பு அதன் நிறுவன பங்காளிகள் வணிகத்தைத் தொடங்கியபோது எயிட்கன் ஸ்பென்ஸ் அதன் வணிக அடித்தளத்தை கூட்டாண்மையில் உருவாக்கியுள்ளது. இன்று இந்நிறுவனம் இலங்கையில் உள்ள ஹோட்டல், சுற்றுலாத்துறை, கப்பல் போக்குவருத்து சேவை, லாஜிஸ்டிக் சொல்யூஷன்ஸ் மற்றும் வலு உற்பத்தி போன்ற துறைகளில் செயல்படும் இலங்கையில் உள்ள முன்னணி மற்றும்  நிதி ரீதியாக நிலையான ,பன்முகப்படுத்தப்பட்ட ஸ்திரத்தன்மை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகும்.

பெருந்தோட்டங்கள், காப்பீடு, நிதி சேவைகள், தகவல் தொழில்நுட்பம், அச்சிடுதல் மற்றும் ஆடை உற்பத்தி ஆகியவற்றில் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க அடைவுகளைக் கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மையானது உள்@ர் சந்தைக்கு சேவை செய்வதற்கும், இந்தியாவுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கான இடமாக மாற்றும் அளவிற்கு வளரும் என்றும் நாங்கள் நம்புகிறோம் ” எனக்குறிப்பிட்டார்.

156 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாம்பே பர்மா, 140 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாம்பே டையிங் , 101 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரிட்டானியா லிமிடெட், 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த நஷனல் பெராக்சைடு லிமிடெட் போன்ற  முன்னணி வணிக சின்னங்களை உள்ளடக்கிய இந்தியாவில் 283 ஆண்டுகள் பழமைவாய்ந்த  வாடியா குழுமத்தின் விமானசேவையே GoAir   ஆகும். புழயுசை தற்போது 300 இற்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை இயக்குகிறது மற்றும் 2005 ஆம் ஆண்டில் GoAir   ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 80 மில்லியன் பயணிகளுக்கு சேவையை வழங்கியுள்ளது.

GoAir 27 உள்நாட்டு இடங்கள் உள்ளடங்களாக 36 இடங்களுக்கு பறக்கிறது. அகமதாபாத், ஐஸ்வால், பாக்டோகிரா, பெங்க@ரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெல்லி, கோவா, குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, லன்னூர், லெனூர் , நாக்பூர், பாட்னா, போர்ட் பிளேர், புனே, ராஞ்சி, ஸ்ரீநகர் மற்றும் வாரணாசி ஆகிய உள்நாட்டு இடங்களுக்கும்  ஃபூகெட், மாலே, மஸ்கட், அபுதாபி, துபாய், பாங்காக், குவைத், தம்மாம் மற்றும் கொழும்பு ஆகிய 9 சர்வதேச இடங்களுக்கும் தனது சேவையை வழங்குகின்றது.

GoAir இன் தினசரி விமானம் (புதன்கிழமை தவிர) பு8 39 டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 10:35 மணி நேரத்தில் (உள்ளூர் நேரம்) புறப்பட்டு 14:10 மணி நேரத்தில் (உள்ளூர் நேரம்) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடையும். திரும்பும் விமானம் பு8 40 கொழும்பிலிருந்து 15:10 மணிக்கு (உள்ளூர் நேரம்) எல்லா நாட்களிலும் (புதன்கிழமை தவிர) புறப்பட்டு 19:00 மணி நேரத்தில் (உள்ளூர் நேரம்) டெல்லியை சென்றடையும்.

இதன் மூலம் இலங்கைப் பயணிகள் டெல்லியின் புகழ்பெற்ற இடங்களான இந்தியா கேட், குதுப் மினார், ஹீமாயூன் கல்லறை, ஜந்தர் மந்தர், செங்கோட்டை போன்றவற்றை பார்வையிடலாம். அத்துடன் அக்ஷர்தாம் கோயில், தாமரை கோயில் மற்றும் இஸ்கான் கோயில் ஆகியவற்றிற்கு ஆன்மீக  யாத்திறை மேற்கொள்ளவும் முடியும். அத்தோடு அருகிலுள்ள  ஆக்ரா , உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள இமாச்சலப் பிரதேசம்  மற்றும் இமயமலை பிரதேசம் போன்றவற்றையும் பார்வையிடலாம்.

டெல்லி-கொழும்பு-டெல்லி நேரடி விமான அட்டவணை, மார்ச் 20, 2020 முதல்:

GoAir இன் விமானம் பு8 47 பெங்க@ரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து திங்கள், வியாழன், வெள்ளி, ஞாயிறு தினங்களில் 20:05 (உள்ளூர் நேரம்) மற்றும் சனிக்கிழமை 20:20 மணிக்கு (உள்ளூர் நேரம்)  புறப்பட்டு 21:55 மணிக்கு  (உள்ளூர் நேரம்) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.  திரும்பும் விமானம் பு8 48 கொழும்பிலிருந்து திங்கள், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 23:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புறப்பட்டு பெங்களூருக்கு 00:30 மணி (உள்ளூர் நேரம்) சென்றடையும்.

பெங்களூர் ஒரு சிறந்த இரவு நேர சுற்றுலாத்தளமாகும். மற்றும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு 19ஆம் நூற்றாண்டின் பெங்களூர் அரண்மனை மற்றும் திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனையையும் இங்கு பார்வையிட முடியும். 2-3 நாட்களுக்குள் விரைவாக சென்று பார்வையிடக்கூடிய அருகிலுள்ள சுற்றுலா தலங்களான கூர்க், ஊட்டி, மைசூர், யலகிரி மலைகள், நந்தி மலைகள் போன்றவற்றுக்கும் இதன் மூலம் பயணங்களை மேற்கொள்ள முடியம்.

பெங்களூர்-கொழும்பு-பெங்களூர், நேரடி விமான அட்டவணை, மார்ச் 20,2020 முதல்