மறைந்த முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு அவரது மகன்  இசுரு அமரசிங்க லண்டனிலிருந்து இலங்கை வந்தடைந்தார். 

சோமவன்ச அமரசிங்க 73 வயதில் கடந்த புதன்கிழமை ராஜகிரியவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலமானார். அன்னாரின் பூதவுடல் களுத்துறையில் உள்ள அவரது இல்லத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சோமவன்ச அமரசிங்கவின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் மக்கள் சேவை கட்சியின் தற்போதைய தலைவருமான சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக்கிரியை நாளை பொரளை பொது மயானத்தில்  இடம்பெறவுள்ளது.