“தமி­ழர்கள் ஒன்­று­பட்டு பய­ணித்தால் நிச்­ச­ய­மாக  நீதியை  பெற முடியும்”

Published By: J.G.Stephan

27 Feb, 2020 | 02:50 PM
image

விடு­தலைப்  போராட்டம் தொடங்­கிய காலத்தில் இருந்து தமி­ழர்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யின்மை   இருந்­த­தா­லேயே நாம் இந்த இடத்தில் நிற்­கின்றோம்.   இனி­யா­வது நாங்கள் அனை­வரும் ஒன்று சேர்ந்து செயற்­ப­ட­ வேண்டும். எமது தனிப்­பட்ட விருப்பு வெறுப்­பு­களை விட்டு நாம் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து  செயற்­ப­ட­ வேண்டும் என்று பிரான்ஸை சேர்ந்த மனித  உரி­மை­  செயற்­பாட்­டாளர் கஜன் தெரி­வித்தார்.

ஜெனி­வாவில்  இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பான காட்­சிப்­ப­டுத்­தல்­களை  நடத்தி வரு­கின்ற அவ­ரிடம்  அதன்   நோக்கம் மற்றும்  விளை­வுகள் என்­பன தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவ­ரு­ட­னான குறு­கிய செவ்வி வரு­மாறு:

கேள்வி:  ஜெனிவா பேர­வையின் 43 ஆவது கூட்டத்தொடர்  ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் எட்­டா­வது வரு­ட­மாக இந்த கண்­காட்­சியை நடத்­து­கின்­றீர்கள்.  இதனால் என்ன பலன் கிடைத்­தி­ருக்­கின்­றது?

பதில்:  ஆயு­தப் ­போ­ராட்­டத்தில்  விரை­வாக  எத­னையும் அடைந்து விடலாம். ஆனால் அர­சியல் ஜன­நாயக போராட்­ட­மா­னது காலம்­க­டந்­துதான் பலன்­தரும். இவ்­வாறு காலம்­க­டந்து பல  நாடு­க­ளுக்கு பலன்­ கி­டைத்­தி­ருக்­கி­றது. அந்த நம்­பிக்­கை­யுடன் எங்­க­ளுக்கும்   நீதி கிடைக்கும் என நம்பி  தொடர்ச்­சி­யாக இங்கு இந்த விட­யங்­களை காட்­சிப்­ப­டுத்திக் ­கொண்­டி­ருக்­கின்றோம்.   இது  மனித  உரிமை  மீறல்கள்  அல்ல.  அப்­படி  மனித  உரிமை மீற­லாக இருந்­தி­ருந்தால் அதனை இலங்­கை­யி­லேயே தீர்த்­தி­ருக்­கலாம். இது­வொரு இனப் ­ப­டு­கொ­லை­யாகும்.  இது ஒரு நீதி­கோரும் பிரச்­சி­னை­யாகும். அதற்­கா­கவே நாம் நீதிகோரிக் கொண்­டி­ருக்­கின்றோம். அதனால் தான் இம்­மு­றையும் இந்த கண்­காட்­சியை செய்­கின்றோம்.

கேள்வி: சர்­வ­தேச  சமூகம் அழுத்தம் கொடுக்­க­வேண்டும் என புலம்­பெயர் அமைப்­புகள் கோரு­கின்­றன.   அத்­துடன் இலங்­கை­யா­னது 30/1  பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­கின்­றது. இந்த சூழலில் இவ்­வா­றான காட்­சிப்­ப­டுத்­தல்கள் எந்­த­ள­வுக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்?

பதில்: இதே­கேள்­வியை 2015ஆம்  ஆண்டு  ஜெனிவா பேர­வையில் நாம் கோரினோம். இந்த விட­யத்தை   சர்­வ­தேசம் கையா­ள­வேண்டும் என்று கோரினோம். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­கோரும் சபை­யா­கவே  ஐ.நா. மனித உரிமை பேரவை இருக்­கி­றது. இலங்கை இதி­லி­ருந்து வெளி­யே­றிக்­கொண்­டாலும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வைக்கு ஒரு கடமை இருக்­கி­றது.  அந்த பேரவை அந்­தக்­க­ட­மையை  நிச்­ச­ய­மாக  நிறை­வேற்­ற­ வேண்டும்.   எமக்கு சர்­வ­தேச   விசா­ரணை  வேண்டும் என்­பதை அனைத்து தரப்­பி­னரும் உண­ர­ வேண்டும். நாங்கள் யாரையும்  நம்­பத்­ த­யா­ரில்லை.  ஐக்­கி­ய ­நா­டுகள்  சபையும்  சர்­வ­தேச  நாடு­களும் எமக்கு உதவி செய்­ய­வேண்டும்.

கேள்வி: புலம்­பெயர் தமிழ் மக்கள் மத்­தியில் இலங்கை விட­யத்தில் ஒற்­று­மையை காண முடி­ய­வில்­லையே?

பதில்: விடு­தலைப் போராட்டம் தொடங்­கிய காலத்திலிருந்து தமி­ழர்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யின்மை இருந்­த­தா­லேயே நாம் இந்த இடத்தில் நிற்­கின்றோம். இனி­யா­வது நாங்கள் அனை­வரும் ஒன்று சேர்ந்து செயற்­ப­ட­வேண்டும். எமது தனிப்­பட்ட விருப்பு வெறுப்­பு­களை விட்டு நாம் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து  செயற்­ப­ட­வேண்டும். இதனை நான் வலி­யு­றுத்­து­கிறேன். இலங்­கையில் பெரும்­பான்மை மக்கள்  தமி­ழர்கள்  தொடர்பில் முடிவெடுக்கும்போது ஒற்றுமையாக இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம்  இதிலிருந்து விலகுவதை வரவேற்பதாக சஜித் பிரேமதாசவும் கூறியிருக்கிறார். இலங்கை பெரும்பான்மை மக்கள்  தமது உரிமை விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். எனவே நாமும் எல்லோரும் ஒற்றுமையாக நின்றால் நிச்சயமாக நீதியைப் பெறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04