ஜின் கங்கையில் குளிக்கச் சென்ற மாணவனொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் தனது சகோதரர் மற்றும் நண்பனுடன் இணைந்து குளிப்பதற்காக ஜின் கங்கை சென்றுள்ளார். முல்கட பாலத்திலிருந்து 100 மீற்றர் தொலைவிலுள்ள ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுழியில் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

பத்தேகம கிறிஸ்தவ பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.