மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் 3வது மாடியில் குளவி கூடு கட்டியுள்ளமையால் 6ஆம் இலக்க அறையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு நான்காவது அறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் அங்குள்ள சேவையாளர்கள் மற்றும் நோயாளர்கள் அச்சமடைந்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் தற்போது நிலவும் கடும் வெயிலினால் குளவி கூடு கலைந்து விடுவதால் குளவிகள்  அனைத்தும் வைத்தியசாலையின் நோயாளர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் வருவதால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக  மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இக்குளவி கூடு இருப்பதால் நோயாளர்களை ஆறாம் இலக்க அறையில் தங்கவைத்து சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே இக்குளவி கூட்டை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.