விடு­மு­றையில் வீட்­டுக்கு வந்த இரா­ணுவ வீரர் ஒருவர் மீண்டும் கட­மைக்குச் செல்­வ­தாகத் தனது புது மனை­வி­யிடம் கூறிச் சென்ற நிலையில் நேற்றுக் (26) காலை தலை துண்­டான நிலையில் புகை­யி­ரத பாதை­யி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.

இதன்­போது கம்­பளை லென்­டன்ஹில் இராயன் மலை பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய ரூப­சிங்ஹ ஆராச்­சி­லாகே திலின சம்பத் என்ற இரா­ணுவ வீரரே இவ்­வாறு கம்­பளை, நாவ­லப்­பிட்டி புகை­யி­ரத பாதை­யில் ­கொஸ்­கொல்ல பாலத்­துக்கு மேலி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் திரு­மண பந்­தத்தில் இணைந்­தி­ருந்த குறித்த இரா­ணுவ வீரர்  உட­வ­லவ்வ இரா­ணுவ முகாமில்  கட­மை­யாற்றி வந்­துள்ளார்.  இந்­நி­லையில் கடந்த 14ஆம் திகதி   விடு­மு­றையில் வீட்­டுக்கு வந்­த­துடன்  பின்னர் சம்­ப­வ­தி­ன­மான நேற்­று ­முன்­தினம் (25) மீண்டும் கட­மைக்கு திரும்­பு­வ­தாக வீட்டில் மனை­வி­யிடம் கூறி­விட்டு சென்­றுள்ளார்.

 

மேலும்  இரவு 9.30 மணி­ய­ளவில் மனைவி  தொலை­பேசி அழைப்­பினை மேற் ­கொண்டபோது தான் செல்­வ­தற்கு பஸ் தயா­ராக இருப்­ப­தாக கூறி­யுள்ள அவர் மீண்டும் 10.30 மணிக்கு அழைப்­பினை மேற்­கொண்ட பொழுது தான் இன்னும் கம்­பளை நகரில் தான் இருக்­கிறேன் என்று கூறி­யுள்ளார்.

பின்னர் மூன்­றா­வது முறை­யாக  11.45 மணி­ய­ளவில் அழைப்­பினை மேற்கொண்ட சந்­தர்ப்­பத்தில் மெனிகே நீ நன்­றாக இருக்­கி­றாயா என கேட்­டுக்­கொண்­டி­ருக்­கை­யி­லேயே புகை­யி­ரதம் வரும் சத்தம் கேட்­ட­தா­கவும் பின்னர் ஒன்றும் கேட்­க­வில்­லை­யெ­னவும் குறித்த இரா­ணுவ வீரரின் மனைவி மரண விசாரணையின்  போது குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசார ணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். .