தென்கொரிய மற்றும் அமெரிக்க கூட்டு இராணுவம் பயிற்சியை காலவரையின்றி மேலும் ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சியோலின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்றைய தினம் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இரு நாட்டுப் படையினரும் பாதிப்படைந்துள்ளதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் கரோலில் உள்ள இராணுவ முகாமில் 23 வயதுடைய தனது நாட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக புதன்கிழமை அமெரிக்க தெரிவித்தது. 

தென் கொரியாவில் இதுவரை 1,595 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 13 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் தென்கொரியா இராணுவத்தினரும் தனது படையில் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo credit : Reuters