ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கையின் முடிவு குறித்து பிரிட்டனும் கனடாவும் கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.
பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கான அமைச்சர் தாரிக் அஹமட் இலங்கை தீர்மானத்திலிருந்து வெளியேற தீர்மானிததுள்ளமை குறித்து ஆழ்ந்த ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை மனித உரிமைகளை பாதுகாக்குமாறும்,நல்லிணக்கம் சமாதானம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொறுப்புகூறல் நல்லிணக்கம் தொடர்பான மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்த தனது அணுகுமுறையை இலங்கை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் பிரான்சுவா பிலிப் சம்பெயின் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பில் இலங்கையை மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு கனடா கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM