நாட்டை அழகுபடுத்தவும் போதைப்பொருள் ஒழிப்பு  செயல்களை நிறுத்தவும் ஏழை விவசாயிகளின் மற்றும்  கால்நடை யாளர்களின் பால் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து  முன்னெடுத்து உயர்த்துவதற்குமான பொருளாதார அபிவிருத்திக்கு இட்டுச்செல்லவும் இந்த அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளாக உள்ளது.

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எமது ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார் என்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை இராசாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில், 

திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்தலும் நாட்டை  அழகுபடுத்தவும் சட்ட விரோத செயல்களை நிறுத்தவும் ஏழை விவசாயிகளின் ஜீவனோபாயமாக  காணப்படும் விவசாயிகளின் ஒரு திட்டமாகக்  காணப்படும் நஞ்சற்ற விவசாயத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை விவசாயிகளிடத்தில் கொண்டு சென்று ஆரோக்கியமான விவசாயிகளாக  அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும் கல்நடையாளர்களின் பால் உற்பத்திகளை அதிகரிக்கப் பால்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தலும் எமது அரசாங்கத்தின் திட்டங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது.  

திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும்,இராஜங்க அமைச்சர் என்ற வகையிலும் அத்தோடு நாடாளவிய ரீதியில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்முக பரீட்சை பிரதேச செயலங்களில் நேற்று 26 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 எனவே இவ்வாறு பிரதேச ரீதியாகத் தேசிய பாடசாலைகள் அபிவிருத்தி .தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது நாடு அபிவிருத்தி  அடைய வேண்டும் குறிப்பாகத் திருகோணமலை கந்தளாய் சீனித் தொழிற்சாலை அபிவிருத்தி செய்யப்பட்டு வெளிநாட்டுக்குச் சீனியை நமது மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்வோம்.

பல்லாயிரக்கணக்கான வேலையற்ற இளைஞர்கள்  உள்நாட்டில் கஷ்டபடுகின்றார்கள் எனவே தொழிவாய்ப்புக்கள் , அத்தோடு சிறு முயற்சியாளர்களுக்கான தொழில் பேட்டைகளை அமைத்து அவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் பெற்றுக் கொடுப்போம் என அமைச்சர் தெரிவித்தார் .

சுற்றுலாத் துறைகளை அபிவிருத்தி செய்து அவர்களுக்குத் தேவையான. உதவிகளையும் செய்வோம் .போதையற்ற நாட்டை உருவாக்கவும் புதிய அரசாங்கத்தின் நலமிக்கதொரு நாடாக மாற்றியமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.