சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்திரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்ல தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் புனித மக்கா ,மதீனாவுக்கான யாத்திரைகளை மேற்கொள்வோருக்கு உம்ரா விஸா வழங்கலை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்கள் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையும் இந்த தீர்மானம் எடுக்க ஏதுவாகியுள்ளதாக அந்நாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வெளியுறவு அமைச்சினால் இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

சவூதியில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கதிலேயே உம்ரா யாத்திரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்வதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் புனித மக்கா ,மதீனாவுக்கான யாத்திரைகளை மேற்கொள்வோருக்கு உம்ரா விஸா வழங்கலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளாவிய ரீதியில் மிக வேகமாக பரவிவருவதை அடுத்தே சர்வதேச நாடுகள் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகாவே இவ்வாறு மக்கா மற்றும் மதீனாவிற்கு வருகைதரும் யாத்திரீகர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அறிவுறுத்தல்கள் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையும் இந்த தீர்மானம் எடுக்க ஏதுவாகியுள்ளது.

இச் செயற்பாடு தற்காலிகமானது. மீண்டும் உம்ரா யாத்திரீகர்களை மக்கா மற்றும் மதீனாவுக்கு வரவழைப்பதற்கான  நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நாடுகளில் இருந்து சவுதிக்கு சுற்றூலா மேற்கொள்வோருக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு , சவுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்ளுக்கும் அங்கு தடை விதிக்கபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் தற்காலிகமாக செயற்படுத்தப்படவுள்ளதுடன், நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் மீண்டும் நடவடிக்கைள் அனைத்தும் நடைமுறைக்குவருமென சவூதி அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image Help : Daily Mail