மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கிய 500 இராணுவத்தினர் நீக்கம் 

07 Dec, 2015 | 08:51 AM
image

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்­பிற்கென ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த 500 இரா­ணு­வத்­தி­ன­ரையும் வில­க்கிக்­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார். கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் நிதி­ய­மைச்சர் ரவி­க­ரு­ணா­நா­யக்க சமர்ப்­பித்த அறிக்­கை­

யொன்றை ஆராய்ந்த பின்­னரே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாதுகாப்­பிற்கு என 500 இரா­ணு­வத்­தி­னரும்

130பொலி­ஸாரும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளா­கவும் எனினும் இதற்­கான அனு­ம­தியை பொலிஸ் தலை­மை­யகம் வழங்­கி­ய­மைக்­கான ஆவ­ணங்கள் எதுவும் இல்­லை­யெ­னவும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமர்ப்­பித்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாது­காப்­பிற்கு என படை­வீ­ரர்கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து எந்­த­வித ஆவ­ணங்­களும் இரா­ணு­வத்­தி­ன­ரி­டமும் காணப்­ப­ட­வில்லை என இரா­ணு­த­லை­மை­யக வட்­டா­ரங்­களும் தெரி­வித்­துள்­ளன.

இதனை தொடர்ந்தே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­விற்கு வழங்­கப்­பட்­டுள்ள பாது­காப்பின் அள­விற்கே மகிந்த ராஜ­ப­க்ஷ­விற்கும் பாது­காப்பு ஏற்­பா­டு­களை வழங்­க­வேண்டும் என உத்­த­ர­விட்­டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் பின்னரே ஏனைய தேவைகள் குறித்து ஆராயவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-21 16:16:18
news-image

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் பல இலட்சம்...

2026-07-21 16:12:20
news-image

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

2026-07-21 16:13:51
news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 16:25:42
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22