ஜெனிவா பிரேரணைக்கு முன்னைய அரசாங்கம் அனுசரணை வழங்கியது இலங்கை அரசியலமைப்பை மீறும் செயல் ; நாம் அதிலிருந்து விலகுகிறோம் - ­தினேஷ்

Published By: J.G.Stephan

27 Feb, 2020 | 09:42 AM
image

( ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவா பேர­வையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணைக்கு முன்­னைய அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கி­யமை  இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லாகும். எனவே எமது அர­சாங்கம் 30/1,  34/1 மற்றும் 40/1 ஆகிய பிரே­ர­ணை­க­ளுக்­கான அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­கின்றது என்று வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன நேற்று ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் அறி­வித்தார்.

எனினும் மனித உரிமை மீறல்கள் மற்றும்  சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்து ஆராய்ந்த முன்­னைய ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கையை ஆராய உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் ஒரு­வரின்  தலை­மையில்   விசா­ரணை ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­படும் என்றும்  அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தி­யின்­றியே இந்தப் பிரே­ர­ணைக்கு முன்­னைய அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கி­யது எனவும் அவர் கூறினார்.  

43 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் நேற்­றைய மூன்­றா­வது நாள் அமர்வில்  இலங்கை சார்பில் அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன உரை­யாற்­று­கை­யி­லேயே இதனை அறி­வித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  இலங்கை  மக்கள் ஜனா­தி­பதி கோட்­ட­பாய ராஜ­ப­க்ஷவை பாரிய ஆத­ர­வ­ளித்து  ஜனா­தி­ப­தி­யாக்­கினர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் இரா­ணுவ ரீதி­யாக தோற்­க­டிக்­கப்­பட்­டனர்.   இது  அனைத்து இன­மக்­க­ளுக்கும் பாது­காப்­பையும்  பெற்­றுக்­கொ­டுத்­தது.  2009 ஆண்­டி­லி­ருந்து இது­வரை   பிரி­வி­னை­வாத பயங்­க­ர­வா­தி­க­ளினால் ஒரு தோட்­டாக்­கூட வெடிக்­கப்­ப­ட­வில்லை.  

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன்  ஒரே இரவில் நிரந்­தர அமை­தியை  காண முடி­யாது என்­பது எங்­க­ளுக்குத் தெரியும்.  எப்­ப­டி­யி­ருப்­பினும்   நிலை­பே­ரான தன்மை மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தில் ஒரு மறு­சீ­ர­மைப்பு எமக்கு தேவை.   முன்­னைய மஹிந்த  ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் இலங்கை காயங்­களை ஆற்றும் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது.   2014 ஆம் ஆண்டு ஆகும் போது நாம்  பல்­வேறு  முன்­னேற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தோம். கண்­ணி­வெடி அகற்றல், மீள்­கு­டி­யேற்றம், காணிமீள் அளிப்பு,  யுத்தம் இடம்­பெற்ற  பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்தை குறைத்தல், முன்னாள் போரா­ளி­களை புனர்­வாழ்வு உட்­ப­டுத்தல், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வாக்­கு­ரி­மையை வழங்­குதல், மனித உரிமை  மற்றும் பொறுப்­புக்­கூ­றல்­க­ளுக்கு  உள்­ளக பொறி­மு­றையை வழங்­குதல் போன்ற விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

எப்­ப­டி­யி­ருப்­பினும் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் 2012,2013,2014 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்­பாக   பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன.  முன்­னைய நல்­லாட்சி அர­சாங்கம் 2015ஆம் ஆண்டு   இலங்கை குறித்த பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­யது.   இந்த பிரே­ர­ணையின் ஊடான எந்த  நட­வ­டிக்­கை­யையும் இலங்கை அர­சி­ய­ல­மைப்பின்  ஊடாக முன்­னெ­டுக்க முடி­யாது.

இது இலங்கை அர­சி­ய­ல­மைப்­பையும்  மக்­களின் இறை­மை­யையும் மீறு­கின்­றது.    இந்த 30/1 பிரே­ர­ணைக்கு  அனு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம்   இலங்கை முன்­னைய  அர­சாங்கம் உள்­ளக  ஒழுங்கு விதி­களை மீறி­யி­ருக்­கி­றது.  அமைச்­ச­ர­வையின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை.   பாரா­ளு­மன்­றத்­திற்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை.  ஜனா­தி­ப­தியின்  ஆலோ­ச­னையும் பெறப்­ப­ட­வில்லை.  இலங்­கையின்  இறை­மை­யையும்  மதிப்­பையும்   அவ­ம­திப்­ப­தாக  அமைந்­தி­ருக்­கி­றது.

இது இலங்­கையின் சர்­வ­தேச  கட்­ட­மைப்பு மீதான   நம்­பிக்­கையை சீர்­கு­லைத்­தது. அத்­துடன் எமது   அணி­சேரா கொள்கை மற்றும் தெற்­கா­சிய ஒற்­று­மையை குழப்­பி­யது.  அத்­துடன் 30/1 பிரே­ர­ணை­யா­னது இலங்­கையின் தேசிய  அக்­க­றையை குறைத்து மதிப்­பி­டு­வ­தாக அமைந்­தது. தேசிய உள­வுத்­து­றையின் செயற்­பா­டுகள்   பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டன. அதன் கார­ண­மாக   உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் தெரி­வுடன் இலங்கை மக்கள் அவ­ருக்கு  ஒரு வித்­தி­யா­ச­மான பாதையில்  நாட்டை கொண்­டு­செல்ல ஆணை வழங்­கி­யுள்­ளனர்.  மக்­களின் விருப்­பப்­ப­டியும்   எமது அணி­சேரா   வெளி­வி­வ­கார கொள்­ளையின் அடிப்­ப­டை­யிலும்   இலங்கை   செயற்­ப­டு­வ­தற்கு  தயா­ராக இருக்­கி­றது.  அந்த வகை­யி­லேயே  இலங்கை நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் ஊக்­கு­வித்தல் என்ற பிரே­ர­ணைக்­கான   அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கு­கின்­றது என்­பதை அறி­விக்­கின்றேன்.

ஆனால் இலங்­கை­யா­னது பொறுப்­புக்­கூறல் மனித உரிமை , நிரந்­தர சமா­தானம், நல்­லி­ணக்கம்  போன்­ற­வற்றை  அடைய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும்.  உள்­ளக ரீதி­யி­லான நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றல்­களை முன்­னெ­டுப்போம். அந்­த­வ­கை­யி­லேயே    உயர்­நீ­தி­மன்ற    நீதி­ய­ரசர் ஒரு­வரின் தலை­மையில் ஒரு விசா­ரணை  ஆணைக்­குழு  அமைக்­கப்­படும். அந்த ஆணைக்­கு­ழு­வா­னது கடந்த காலங்­களில் மனித  உரிமை மீறல்கள் சர்வதேச மனதாபிமான சட்டமீறல்கள்   தொடர்பாக  ஆராய்ந்த  ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கும்.    அத்துடன்  நிலைபேரான அபிவிருத்தி இலக்குகளை  அடைய  நடவடிக்கை எடுக்கப்படும்.   அத்துடன்   இலங்கையானது  ஐக்கியநாடுகள் சபை கட்டமைப்புடன் தொடர்ந்து இணைந்து செயற்படும்.   மேலும்  அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து இந்த பிரேரணையை  முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் செயற்படும்.

 இலங்கை அரசாங்கத்தை விட எமது மக்கள் மீது யாரும்   அக்கறையுடன் செயற்பட முடியாது.   எனவே  அனைத்து தரப்பினரும்  எம்முடன் இணைந்து செயற்படவேண்டும் என நாம்  அழைப்பு விடுக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19