கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்காக பிரார்த்தனை செய்வோம் - அருட்தந்தை அன்ரன்

Published By: Daya

27 Feb, 2020 | 09:55 AM
image

இன மத வேறு பாடின்றி நாம் பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் மனித நேயத்தோடு நாம் வழிபடும் கடவுளிடம் கொரோனா வைரஸினால்   பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆன்மாக்களுக்காகவும், இவர்களை இழந்து துயரப்படும் மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம் என மன்னார் கரிற்றாஸ் வாழ்வோதைய இயக்குநர்  அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.

உலகையே அச்சத்திற்குள்ளாகும் கொரோனோ வைரஸினால் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களுக்கான இரங்கல் வழிபாடு மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதய மண்டபத்தில் அதன் இயக்குநர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய காலத்தில் உலகை அச்சத்தில் ஆழ்த்தும் விடயம் கொரோனா வைரஸ். இதன் தாக்கம் படிப்படியாகப் பல நாடுகளில் பரவி வருகின்றது. 

குறிப்பாகச் சீனாவிற்கு அடுத்தாக இத்தாலி, தென்கொரியா போன்ற நாடும் பாதிக்கப்படுவதாகச் செய்திகளில் அறிகின்றோம்.

எனவே இன மத வேறுபாடின்றி நாம் பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் மனித நேயத்தோடு நாம் வழிபடும் கடவுளிடம் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த  ஆன்மாக்களுக்காகவும், இவர்களை இழந்து துயரப்படும் மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

 இவை மட்டுமல்லாது இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்கு இரவு பகல் பாராது பாடுபடும் வைத்திய நிபுணர்களுக்கு இறைவன் நல்லதொரு வழிகாட்டியாகச் செயற்படுவதற்கும், அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வது காலத்தின் தேவை என்பதைவிட இதுவே மனித மாண்பை மதிக்கும் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது கறிற்ராஸ்-வாழ்வுதய பணியாளர்கள் மற்றும் வாழ்வுதயத்தில் கணினி பயிற்சியினை பெறும் மாணவர்கள் அனைவரும் இணைந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08