ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுக்கும் பிரதான எதிர்கட்சியான தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்றைய தினம் ஜெனீவாவில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றார். 

இச்சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள்  குறித்து அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கம் உட்பட நான்கு நாடுகள் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டடிருந்தது. 

இத்தீர்மானத்தின் பிரகாரம் அரசாங்கம் தனது பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கமைவாகவும் ஐ.நா உட்பட சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மேற்படி சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.