வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்

Published By: Digital Desk 4

26 Feb, 2020 | 09:36 PM
image

 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று  சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகளுக்கு முன்  நிறுத்தப்பட வேண்டும். தான் தமிழ் மக்களின் எதிர் பார்ப்பு இந்த விடயத்தில் கூட ஐ.நா சபை உறுப்படியாக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

 எனவே இனி எதிர்வரும் காலங்களிலாவது  இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 30.140.1 தீர்மாணங்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்ட பின்னராவது  சரியான ஒரு நடவடிக்கையை எடுக்க ஐ.நா முயற்சிக்க வேண்டும்.

மேலும் உள்ளுர் விசாரணை என்பது எப்படி அமையும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக அமையும். குற்றவாளிகளும் அவர்களே நீதிபதிகளும் அவர்களே என்ற ரீதியில் இருக்கும் இந்த அரசிடம் இருந்து ஒரு துளி நியாயத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம் பெற்ற தாக்குதலுக்கான  சூத்திரதாரிகளை இன்னும் கண்டு பிடிக்கவில்லை.   அவை பற்றிய ஒழுங்கான அறிக்கை தயாரிக்கப்படவில்லை  காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு விட்டது.

மன்னார் மனிதப் புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஒழுங்காக பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.   அந்த எலும்புக் கூடுகள் யாருடையது, எந்த காலத்துக்கு உரியது என்ற நம்பகமான அறிக்கையை வெளியிட இந்த அரசு தயங்குகிறது.

 வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.   யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ  அவ்வாறே அனைத்துப்பகுதிகளிலும் உள்ளது.

  ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்கவில்லை  என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடி பணிய வைத்து விடலாம் என்று ஜனாதிபதி கணவு காண்கிறாரா?  இவ்வாறான அடக்கு முறைகளை நேரடியாக கண்காணிப்பதற்கு ஐ.நா  அலுவலகம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்து பகுதிகளில் திறக்கப்பட வேண்டும் .

அப்போது தான் தமிழ் மக்களின் ஜனநாயக வாழ்வுரிமை உரிதிப்படுத்தப்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07