ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான இயக்குநர் ஜோன் பிசர் கருத்து வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐக்கியநாடுகளிற்கான தனது அர்ப்பணிப்புகளை இலங்கை கைவிடுகின்றது என குறிப்பிட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரும் ஏமாறக்கூடாது யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ராஜபக்சாக்கள் பொறுப்புக்கூறுதலை முன்னகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான இயக்குநர் ஜோன் பிசர் கருத்து வெளியிட்டுள்ளார்