(ஆர்.விதுர்ஷா)

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித  உரிமைகள்  பேரவையில்  நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு  இலங்கை வழங்கிய அனுசரனையிலிருந்து அரசாங்கம்  விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேச  நாடுகளின்  கோபத்திற்கு  உள்ளாக நேரிடும் என்று  ஐக்கியதேசிய கட்சியின்  குருணாகலை மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  அசோக் அபேசிங்க  தெரிவித்தார். 

ஐ.தே.க அரசாங்கம்  எந்த  தருணத்திலும்  நாட்டை பிளவு  படுத்த   முயற்சிக்கவில்லை எனவும்,  நாட்டின் நலன் கருதியே  மனித உரிமைகள் தொடர்பிலான  பிரச்சினை எழுந்த போது சர்வதேச  நாடுகளுடன்   இணக்கப்பாட்டுடன் செயற்பட்டதாகவும் அவர்  மேலும் குறிப்பட்டார். 

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.