மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

Published By: Digital Desk 4

26 Feb, 2020 | 08:48 PM
image

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இப்பணிப்புரையை விடுத்தார்.

ஏற்றுமதி சந்தை தொடர்பாக, கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும்போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம் செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி தெளிவூட்டினார். சட்டத்திற்கு புறம்பான முறைகளில் மீன்களை பிடிப்பதை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

ஏற்றுமதி நிறுவனங்கள் தமது கப்பல் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை மாத்திரமே கொள்வனவு செய்வதாக மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். தாம் ஏற்றுமதி கைத்தொழிலில் மாத்திரம் தங்கியுள்ளதால், தமது விளைச்சலுக்கு உரிய சந்தை வாய்ப்புக்கள் கிடைக்காமை பாரிய பிரச்சினையாக உள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினர்.

குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகள் மூலம் இப்பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி கூறிய ஜனாதிபதி, ஏற்றுமதியாளர்களுடன் படகு உரிமையாளர்களையும் இணைத்துக்கொண்டு தேவையான எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினார். 

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக தனியார் துறையினரின் உதவியோடு அவர்களின் விளைச்சலை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு பணிப்புரை விடுத்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்லஸ் தேவாநந்தா, இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த பெரேரா, காஞ்சன விஜேசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, நிதி, பொருளாதார மற்றும் கொள்கைவகுப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09