பாரிஸில் 60 வயதான ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் தமது நாட்டைச் சேர்ந்த பிரஜை எனவும், தனது நாட்டுப் பிரஜையொருவர் கொரோனாவினால் உயிரிழக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென பிரான்ஸ் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் பிரான்ஸ் தலைநகரில் உள்ள பிட்டி சால்பெட்ரியர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார ஆணைய இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவளை‍ கொரோனா தொற்று தொடர்பில் இன்றை தினம் இரண்டு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Photo Credit : CNN