சுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்,

By T Yuwaraj

26 Feb, 2020 | 05:57 PM
image

திருகோணமலை நகரில் அமைந்துள்ள சிவன் கோயில் முன்றலில் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சுருக்குவலை மீன்படிமுறைமையை நிரந்தரமாக தடைசெய்யக்கோரியே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்தல், தடைசெய்யப்பட்ட பிரதேசங்களில் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்தல், டைனமைட் வெடிமருந்து பாவித்தல் போன்ற மீன்பிடி முறைகளால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடி முறைகளை பாவித்து மீன்படியில் ஈடுபடும் மீனவர்களின் உழைப்பு பாதிக்கப்படுவதாக கூறியே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர் 

 இன்று காலை 8.00 மணிமுதல் குறித்த சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right