லண்டனில் இயங்கி வரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனமொன்றில் கொரோனா தொற்று தொடர்பான அச்சத்தை அடுத்து அங்கு பணி புரியும் சுமார் 300 ஊழியர்களை குறித்த நிறுவனம் வீட்டிற்கு அனுப்பியுள்ளதுடன், நிறுவனத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடொன்றுக்கு சென்ற அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் மீண்டும் லண்டனுக்கு திரும்பிய நிலையில், அண்மையில் குறித்த தொழிற்சாலைக்கு பணிக்காக சென்றுள்ளதையடுத்து அவருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதையடுத்து இது தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் குறித்த ஊழியரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந் நிலையில் அவரின் பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரையில் குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள், வர்த்தகர்கள், கீழ்நிலை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட சுமார் 300 பேரை நிறுவனம் வீட்டுக்கு அனுப்பியுள்ளதுடன், வீட்டிலிருந்தே தொழில்புரியுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை மேற்கண்ட நிறுவனமானது சர்வதேச மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி நிலைமையை கண்காணித்து வருவதாகவும், ஆபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM