முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் ஜனாஸா இன்று (16) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது ஜனாஸா இன்று மாலை 3.30 மணியளவில் தெஹிவளை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அலவி மௌலானா 2002 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுவரை மேல்மாகாண ஆளுநராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அலவி மௌலானாவின் ஜனாஸாவிற்கு பல அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.