(எம்.ஆர்.எம்.வஸீம்)

தோட்டத்தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதியில் இருந்து ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தோட்டக் கம்பனிகளுடனும் இதுதொடர்பாக கதைத்திருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சரும் அரசாங்க ஊடக பேச்சாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அதேபோன்று வறுமை நிலையில் இருக்கும் ஒரு இலட்சம் குடும்பங்களைச்சேர்ந்தவர்களுக்கு தொழில் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 4 இலட்சத்துக்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

நாளை முதல் அவர்களுக்கான நேர்முகப்பரீட்சை இடம்பெறும். விண்ணப்பித்த அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு கிடைக்காதவர்கள் பிரதேச செயலகங்களில் அதுதொடர்பாக முறையிடலாம். இவர்களுக்கு மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு நியமனம் வழங்கப்படும்.

அத்துடன் 54ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்து அதற்கும் விண்ணங்கள் போரப்பட்டன. பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை அடுத்தவாரமளவில் இடம்பெற இருக்கின்றது. அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும்.

மேலும் கடந்த அரசாங்கம் மக்களுக்கு சுமக்க முடியாதளவு வரிச்சுமையை உயர்த்தியிருந்தது. அதனால் நாங்கள் வட்வறியை 15வீதத்தில் இருந்து 8வீமதாக குறைத்திருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் வறி திருத்தம் மேற்கொள்ள பாராளுமன்றத்தில் அனுமதி பெறவில்லை, அதனால் இது சட்டவிரோதமானது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது. ஆனால் பாராளுமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கு, நாங்கள் வறி அதிகரிக்கவில்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்கும்வகையில் வறியை குறைத்திருக்கின்றோம் என்றும் கூறினார்.