சீனாவின் வுஹானில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸானது இந்த வாரம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலும் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்க இராணுவ சிப்பாய் பாதிப்பு: 

23 வயதான அமெரிக்காவின் இராணுவ சிப்பாய் ஒருவர் தென்கொரியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள ஆளான முதல் அமெரிக்க இராணுவ சேவை உறுப்பினர் இவர் ஆவார். தற்போது மேற்படி நபர் பியோங்டேக் நகருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

406 புதிய கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்ட சீனா:

இன்றைய தினம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் கொரோனா தொற்று தொடர்பான 406 புதிய நோயாளர்களை அடையாளம் கண்டுள்ளது. இவர்களில் ஐவர் மாத்திரம் ஹூபே மாகாணத்திற்கு வெளியே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இன்றை தினம் சீனாவில் மேலும் 52 இறப்புகளும் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் முன் ஆயத்தம்:

அமெரிக்காவில் வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் வைரஸ் நாட்டில் பரவுவதை தாம் அங்கீகரிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள், வைரஸ் மேலும் பரவால் இருக்க முன் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் பாதிப்பு அதிகரிப்பு:

குவைத் மற்றும் பஹ்ரைனில் இன்று அதிகமான கொரோனா தொற்று நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். ஈரானில் இதுவரை 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை பஹ்ரைனில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அழுத்தங்களுக்கு மத்தியில் இத்தாலி:

தற்போது ஆசியாவுக்கு வெளியில் மிகப்பெரிய கொரோனா வெடிப்பின் மையமாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் தற்போது கொரோனா தொற்றினால் 322 பேர் பாதிக்கப்பட்டள்ளதுடன், 11 உயிரிழப்புளும் இடம்பெற்றுள்ளது. 

ஒரு கொரோனா நோயாளியை ஒரு மருத்துவமனை தவறாக கையாண்டமை வைரஸின் வேகமான பரவலுக்கு பெரிதும் பங்களிப்பு‍ செய்துள்ளதுதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

2020 டோக்கியோ ஒலிம்பிக் கேள்விக்குறி:

மே மாத இறுதிக்குள் கொரோனா வைரஸானது கட்டுப்படுக்குள் கொண்டுவரப்பாடாவிட்டால் ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் குற்றத்துக்காக 4000 க்கும் மேற்பட்டோர் தடுத்து  வைப்பு:

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து சீனா 4,260 பேரை தொற்றுநோய் தொடர்பான குற்றவியல் குற்றங்களுக்காக தடுத்து வைத்துள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவளை கொரோனா வெடிப்பு தொடர்பான சுமார் 22,000 குற்றவியல் சம்பவங்களை அதிகாரிகள் கையாள்கின்றனர்.

சில சம்பவங்கள் தரக்குறைவான முகமூடிகள் மற்றும் பாதுகாப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை சம்பந்தப்பட்டவையாகும்.

அவர்களில் ஒருவர் வுஹானைச் சேர்ந்தவர் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்டார், அவர்களின் பயண வரலாறு மற்றும் உண்மையை மறைத்தமைக்காகவே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.